Wednesday, November 21, 2012

எங்கேயும் எப்போதும்

இயற்கை எப்போதும் திறந்த பள்ளிக்கூடம்

Tuesday, November 20, 2012

நீ யார்?

தோன்றி வந்ததன் உண்மை அறியின்
எளிதாம் எதிர்காலம் எதுவென அறிதல்
பண்பிலே மாண்பு கண்டார் முன்னோர்
பண்பிதுவென பகர்ந்தார்  பின் வந்தோர்
பண்பறி வாழும் பக்குவம் இன்றெங்கே?


வாளொடு தோன்றிய புவன மூத்தகுடி 
கையே ஆயுதமென்பது பரிணாமப் பிழையா 
இயற்கையின் நிலைப்பு இருத்தலைக் காத்தல்
இன்று இயற்கைக்கே மூச்சுத் திணறல்
இயல்பிதுவென அறிந்து பிறப்பது எந்நாளோ?


தொன்மை பேசுவதே தமிழர்க்குச் சுகமாம்
எள்ளி நகையாடுவர் குறுமனத் தமிழர்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
பகன்றான் பவணந்தி பகுத்தறிந்து அன்றே
புன்மை இருட்கணம் தொலைவது எந்நாளோ?


இருப்பது அறியான் அடுத்தார் அகம் பார்ப்பான்
இயல்பு இதுவென அறியா மாக்களாய் மடிவான்
இவர்தாம் எம்தமிழர் எனப் புரியா இளையர்
இன்று குருடராய் அறியாதார் பாதம்பற்றி
இயல்பு வாழ்வென உணர்த்துவது எவராமோ?

நானே தமிழென வெளி சிலிர்க்கும் சான்றோர்
தமிழே தாம் தாம் எனக் கர்ஜிக்கும் நரிகளாய்
என்ன கொடுமையடா இவர்தம் கூற்று
தமிழை வாழ்விக்கத் தலைப்பட வேண்டா
தமிழே இதுவென என்று தலைப்படத் துணிவரோ ?

பாமரன் வாழ்வியலைக் கற்றுத் தந்தான்
ஊரான் உண்மைகள் எல்லாம் தமதென்றான்
அன்னையை அடையாளம் தெரியாதார்
கண்டவன் சொல்லே ஞானமந்திரமென்றார்
நனிஞானம் பயிலத் தமிழின்றி எது கதியாம்?


நெஞ்சு பொறுக்குதிலையே இன்றும் என்றும்
உம் சிந்தனை குறை மடமைகளைக் காணின்
வெந்து வீணராய் மாயுமுன்னே இப்பாரும்
முந்தித்  தமிழிதுவென அறிவதே வாழ்வென
முந்திச் செய்யாதாயின் மிஞ்சுமோ இனியுலகம்?


தமிழ் பழகுவோரெல்லாம் தமிழரல்ல
தமிழ் இதுவென அறிவோர்மட்டும் தமிழரே
தமிழ் மொழியல்ல தரணியில் ஒன்றாய்
தமிழே  வழியாம் தரணி ஒன்றென வாழ
தலைப்படு தமிழா தரணிவாழ தமிழே கதியாம்





Sunday, August 19, 2012

பிறப்பு, இறப்பு இரண்டின் உண்மை தெரியா மனிதன்
அவநம்பிக்கையைப் போக்க நம்பிய வழியா கடவுள் வழிபாடு - கருத்துரைக்க

வழிபாட்டுப் பாடல்கள்


வழிபாட்டின் தொடக்கம் யாது?


வழிபாடு பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் தன்மை மனித சமுதாயத்தைப் பாதித்து வந்திருக்கிறது?

வழிபாட்டுக்குரிய கடவுள் அமைப்புகளும் வழிபடு முறைகளும் எவ்வாறு சமுதாயத்தின் நிலையைப் பிரதிபலிக்கின்றன?


இன்றைய வழிபாட்டின் நோக்கத்திற்கும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வழிபாட்டின் நோக்கத்திற்குமான ஒற்றுமை வேற்றுமைகள் யாவை?


கடவுள் என்ற நம்பிக்கை முதலில் பிறந்து அதனையொட்டி வழிபாடு பிறந்ததா?


இயற்கை நிகழ்வுகளைக் கண்டு மனிதன் தனக்கு மீறிய சக்தி இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டானா?


சமூகத்தில் தான் கடைப்பிடித்து வந்த மரியாதை நிமித்தமான நடத்தைமுறைகளை தான் நம்பிய அச்சக்திக்குச் செலுத்தி வந்ததால் வழிபாடு தோன்றியதா?

Saturday, August 18, 2012